என் பெயர் சல்மான். நான் தற்பொழுது கல்லூரியில் படித்து வருகிறேன். எனக்கு படிப்பது என்றால் ரொம்ப பிடிக்கும். நான் முக நூல் ஆரம்பித்த பிறகு எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அந்த முக நூலின் வழியாக எனக்கு பரிச்சயம் ஆனது தான் இந்த ப்ளாக். முக நூலில் நெறைய நபர்கள் தங்களுடைய கருத்தினை எழுதி இருந்தார்கள். அதை படித்த பொழுது பயனுள்ள தகவல்களும், எனக்கு தெரியாத அறிவான தகவல்களும், சிறந்த நகைச்சுவைகளும், கதைகளும், கட்டுரைகளும், தேச தலைவர்களின் வாழ்கை வரலார்களும் அறிந்து கொண்டேன். அதன் விளைவாக நான் எனது எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டு எனக்கு இது போன்று ஒரு ப்ளாக் உருவாக்கி கேட்ட பொழுது எனது உடன் பிறவா சகோதரி இந்த தளத்தை உருவாக்கி தந்தார். இனி நான் படித்தவற்றையும் சிரித்தவற்றையும் பதிவிடலாம் என்று எண்ணி உள்ளேன். இனி எனது அதிரடி தொடரும் உங்கள் ஆக்கமும் ஊக்கமும் வேண்டி தொடர்கிறேன். சுய அறிமுகம்; பெயர்; சல்மான் [சல்மான் கான் ஆகனும்னு ஆசை இருக்கு] ஊர்;லண்டன் [நம்பவா போறீங்க] கல்வி; படிச்சிகிட்டே இருக்கேன் தொழில்; தேடிகிட்டு இருக்கேன் பிடித்தது;பிரிய...
Comments