வரலாறு சிறப்பு

     ஃபேரி டேல் என்பது ஒரு வகைக் கதை கூறலைக் குறிக்கும் ஆங்கில மொழி சொல்லாகும்.     இதன் ஜெர்மானிய, ஸ்வீடன் மொழிச்சொல் அல்லது இத்தாலியச் சொல் ஆகியவை முறையே மார்ச்சன் (Maerchen), சாகா (saga) மற்றும் ஃபியாபா (fiaba) ஆகியவையாகும். சிறு எண்ணிக்கையிலான கதைகள் மட்டுமே பிரத்யேகமாக விசித்திரக் கதைகள் என்ற வகையின் கீழ் உட்படுத்தப்படுகின்றன. இருப்பினும், செவிவழிக் கதைகள், பாரம்பரியக் கதைகள் (பொதுவாக விவரிக்கப்படும் நிகழ்வுகளைப் பற்றிய உண்மை கூறலைப் பற்றிய கதைகள்)[1] போன்ற பிற நாட்டுப்புறக் கதைகள் மற்றும் விநோத உயிரிகளைப் பற்றிய கதைகள் உள்ளிட்ட சிறப்பான நீதிக் கதைகள் போன்றவற்றை இவற்றிலிருந்து வேறுபடுத்த முடியும். விசித்திரக் கதைகளில் வழக்கமாக, தேவதைகள், குட்டிச்சாத்தான்கள், குறும்புக்கார தேவதைகள், நட்பு தேவதைகள், பூதங்கள் அல்லது குட்டி மனிதர்கள் போன்ற நாட்டுப்புறக் கதைக் கதாப்பாத்திரங்களும், மாயாஜாலங்கள் அல்லது மந்திரங்களும் இடம்பெறும். பெரும்பாலும் இந்தக் கதைகள் கற்பனைத்தனமான சம்பவங்களின் தொடர்ச்சியைக் கொண்டவையாக இருக்கும்.
குறைந்தபட்ச தொழில்நுட்பச் சூழலில் இந்தச் சொல்லானது "விசித்திரக் கதைகளின் முடிவு" (சுபமான முடிவு)[2] அல்லது "விசித்திரக் கதைகளின் காதல்" (இருப்பினும் அனைத்து விசித்திரக் கதைகளும் முடிவில் மகிழ்ச்சியாக முடிவதில்லை) போன்ற அம்சங்களைக் கொண்டு, வழக்கத்திற்கு மாறான மகிழ்ச்சிக்கான ஆசிர்வாதத்தைப் பெறுதல் போன்றவற்றை விவரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கில் "விசித்திரக் கட்டுக்கதை " அல்லது "விசித்திரக் கதை" என்பது எந்த ஒரு கற்பனை மிகுந்த கதையையும் குறிக்கலாம்.
அரக்கர்கள் மற்றும் மந்திரவாதிகள் உண்மையாக இருப்பதாக நம்பப்படும் கலாச்சாரங்களில் விசித்திரக் கதைகளும் செவிவழிக் கதைகளும் கலந்திருக்கலாம். அந்த செவிவழிக் கதைகளின் கதைகூறல் விதமானது கேட்பவருக்கும் கூறுபவருக்கும் வரலாற்று உண்மையின் அடிப்படையில் அமைந்திருப்பது போலவே தோன்றக்கூடிய வகையில் அமைந்திருக்கும். இருப்பினும், செவிவழிக் கதைகள் மற்றும் புராணங்களைப் போல் இல்லாமல் இவற்றில் மதம் மற்றும் இடங்கள், மக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தொடர்பான மூட நம்பிக்கையின் அடிப்படையிலான அம்சங்களைத் தவிர்த்து வேறெதுவும் இருக்காது; அவை உண்மையான காலத்தில் அல்லாமல் முன்பொரு காலத்தில் நடந்த சம்பவமாகவே கூறப்படும்.[3]
வாய்வழிக் கதைகள் மற்றும் எழுத்து வடிவக் கதைகள் ஆகிய இரண்டு வடிவத்திலும் விசித்திரக் கதைகள் காணப்படுகின்றன. எழுத்து வடிவங்கள் மட்டுமே இருக்க முடியும் என்ற காரணத்தினால் விசித்திரக் கதைகளின் வரலாறானது சரியாக அறிவது கடினமாக உள்ளது. இருப்பினும், எழுத்துப் படைப்புகளின் ஆதாரங்களின் படி விசித்திரக் கதைகளானவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருவதாகக் குறிக்கின்றன. இது ஒரு வகையாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அவற்றுக்கான விசித்திரக் கதைகள் (ஃபேரி டேல்ஸ்) என்ற பெயரை முதன் முதலில் பயன்படுத்தியவர் மெடாமே டி'அல்னாய் (Madame d'Aulnoy) என்பவர் தான். இன்றைய விசித்திரக் கதைகள் எல்லாம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு உலகின் பல பகுதிகளில் பல்வேறு கலாச்சாரங்களில் சிறிதளவு வேறுபாடுகளுடன் இருந்த கதைகளிலிருந்து உருவானவையே.[4] விசித்திரக் கதைகள் மற்றும் அதிலிருந்து உருவான படைப்புகள் ஆகியவை இன்றும் எழுதப்பட்டு வருகின்றன.
பழைய விசித்திரக் கதைகள் பெரும்பாலும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்காகவும் என்றே உருவாக்கப்பட்டவை. ஆனால் ப்ரீஷியஸ் வகை எழுத்தாளர்களின்(writings of the précieuses) எழுத்துகள் குழந்தைகளுடன் இணைக்கப்பட்டு விட்டன; க்ரிம் (Grimm) சகோதரர்கள் தங்கள் தொகுப்பிற்கு சில்ட்ரன்'ஸ் அண்ட் ஹௌஸ்ஹோல்ட் டேல்ஸ் (Children's and Household Tales) எனப் பெயரிட்டனர். ஆனால் காலப்போக்கில் இக்கதைகளுடன் குழந்தைகளுக்கு உள்ள இணைப்பே உறுதியாக வளர்ந்தது.
வாய்வழிக் கதையாசிரியர்கள் விசித்திரக் கதைகளைப் பல்வேறு விதமாக வகைப்படுத்தியுள்ளனர். அவற்றில் மிகவும் பிரபலமானவை ஆர்னே-தாம்சன் (Aarne-Thompson) வகைப்பாட்டு முறையும் விளாடிமிர் ப்ராப் (Vladimir Propp) அவர்களின் உருவியல் பகுப்பாய்வும் ஆகும். பிற வாய்வழிக் கதையாசிரியர்கள் இந்தக் கதைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்திருந்தனர். ஆனால் கதைகளின் பொருள் பற்றிய வரையறுக்கப்பட்ட கருத்தாக்கங்கள் எதுவும் உருவாக்கப்படவில்லை

Comments

Popular posts from this blog

நானும் வந்துட்டேன் பதிவுலகத்திற்கு